உணவு பொருளால் ஏற்படும் தோஷம்..!! இதே தவறை நீங்களும் செய்யாதீங்க..!!
நம்முடைய மதிமுகம் ஆன்மீக நிகழ்ச்சியில் இதுவரை ராசிபலன்கள்.., ஆன்மீக கதைகள்., தெய்வீக கதைகள்., ஆன்மீக குறிப்புகள் பற்றி பார்த்து வருகிறோம்..
அதிலும் குழந்தை வரம்., திருமணத்தடை., நாக தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் பற்றி பார்த்து இருப்போம் அந்த வகையில் இன்றைய ஆன்மீக பதிவில் நாம் பார்க்க இருப்பது உணவால் ஏற்படும் தோஷங்களை பற்றி தான் பார்க்க போகிறோம்..
தோஷம் :
தோஷம் என்பது எப்படி ஒருவருக்கு ஏற்படுகிறது.., எந்த உணவை சாப்பிட்டால் எந்த வகையான தோஷம் உண்டாகிறது என்பது பற்றி இதில் பார்க்கலாம்..
தோஷங்களானது 5 வகையாக பார்க்கப்படுகிறது…
5 வகை தோஷங்கள் :
1. அர்த்த தோஷம்
2. நிமித்த தோஷம்
3. ஸ்தான தோஷம்
4. ஜாதி தோஷம்
5. சம்ஸ்கார தோஷம்..
என சொல்லுவார்கள்., அப்படியாக இன்றைய பதிவில் அர்த்த தோஷம் பற்றி படிக்கலாம்.
அர்த்த தோஷம் :
நாம் வீட்டில் வைத்துள்ள பொருட்களால் கூட சில சமயங்களில் தோஷங்கள் ஏற்படும்.. அப்படி பொருளால் ஏற்படும் தோஷத்தை அர்த்த தோஷம் என சொல்லுவார்கள்…
அர்த்தம் என்பதை “பொருள்” என சொல்லுவார்கள்., சமைப்பதற்கு பொருட்கள் தேவை மிகவும் அவசியம். அப்படியாக நாம் சமைக்கும் சில உணவுப் பொருள்கள் மற்றவர்களை ஏமாற்றி வாங்கி இருந்தாலோ அல்லது மற்றவர்கள் விருப்பமின்றி ஒருவரது வீட்டில் இருந்து எடுத்து வந்தாலோ இந்த அர்த்தம் தோஷம் ஏற்படும் என சொல்லப்படுகிறது..
எனவே இதற்கு முன்னர் அப்படி ஏதாவது பொருள்கள் உங்கள் வீட்டில் இருந்தால் செவ்வாய்கிழமை நாட்களில் உணவுப் பொருள்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தால் தோஷங்கள் விலகி விடும் என்பது ஐதீகம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..