கோடைக்காலத்துக்கு ஏற்ற முள்ளங்கி கூட்டு… அருமையான சுவையில்…
நீர் காய்கறிகளில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று முள்ளங்கி. கோடைக்காலத்தில் இதை உண்பது மிகவும் நல்லது. முள்ளங்கி கொண்டு பொரியல், சாம்பார், கூட்டு என பல வகையாக செய்யலாம்.
முள்ளங்கு மற்றும் பாசிப்பருப்பு கலந்து செய்யும் இந்த கூட்டு சுவை மிகுந்து இருப்பதோடு கூட்டை சப்பாத்தி, சாப்பாட்டோடு சேர்த்து உண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த
இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை மிகுந்த கூட்டு எப்படி வீட்டிலே சுவையாக சமைக்கலாம் என்று பார்போம்.
தேவையான பொருட்கள் :
-
முள்ளங்கி – 2 கிலோ
-
பெரிய வெங்காயம் – 1
-
பழுத்த தக்காளி – 2
-
கறிவேப்பிலை – சிறிதளவு
-
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
-
மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
-
உப்பு – சுவைக்கேற்ப
-
பாசிப் பருப்பு – 1/2 கப்
தாளிக்க தேவையானவை :
-
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
-
கடுகு – 1/4 டீஸ்பூன்
-
சீரகம் – 1/4 டீஸ்பூன்
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள அளவு பாசிப்பருப்பு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை நன்றாக அலசிவிட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின் முள்ளங்கியை எடுத்து அதன் தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் முன்பு ஊறவைத்த பாசிப்பருப்பு போட்டு அத்துடன் வெட்டி வைத்த முள்ளங்கி, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அதனுடன் சிறிதளவு உப்பு போடவேண்டும்.
பின் அதில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக கலந்துவிட்டு மூடி தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் வரும்வரை விட்டு எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணல் ஒன்றை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
வேகவைத்துள்ள முள்ளங்கி கூட்டில் இதை கொட்டி நன்றாக கிளறிவிடவும்.
இப்போ சுவையான எல்லோருக்கும் பிடித்த முள்ளங்கி கூட்டு தயார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.