ஹெல்தியான வேர்கடலை லட்டு..! ஈவினிங் ஸ்நாக்..!
தேவையான பொருட்கள்:
வேர்கடலை 500 கிராம்
வெல்லம் அரை கப்
ஏலக்காய்த்தூள் 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு அகலமான ஃபேனை அடுப்பில் வைத்து அதில் 500 கிராம் அளவு வேர்கடலை சேர்த்து மிதமான தீயில் நன்றாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வறுத்த வேர்கடலையை நன்றாக ஆற வைத்து அதன் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் இப்போ வேர்கடலை தயாராகிவிட்டது.
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனை மிக்ஸியில் உள்ள பல்ஸ் மோடில் வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் அரை கப் பொடியான வெல்லம், ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து அதே மாதிரி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதில் ஒரு பிடி எடுத்து லட்டு வடிவத்தில் நன்றாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் ஹெல்தியான வேர்கடலை லட்டு தயாராகிவிட்டது.
இதனை குழந்தைகளுக்கு ஈவினிங்கில் டக்குனு ஹெல்தியா செய்து கொடுக்கலாம்.
குழந்தைகள் வேர்கடலை லட்டை ரொம்ப விரும்பி மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ட்ரைப் பண்ணி பாருங்க..