கலைஞர் வாழ்நாள் சரித்திர சாதனை..!! 1100 பேருக்கு ஆஞ்சியோ.. அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி..!!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனியார் ரோட்டரி கிளப் சங்கத்துடன் இணைந்து 10,000 பயனாளிகள் பயனடையும் செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்…
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்… முதல்வர் வழிகாட்டுதல் படி மக்கள் நல்வாழ்வு துறையில் தினம்தோறும் பல்வேறு வகையான புதிய புதிய கட்டமைப்புகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது…
பசுமை மருத்துவமனை :
இந்த மருத்துவமனை ஒரு நூற்றாண்டைக் கடந்த பழமை வாய்ந்த மருத்துவமனையாகும், கடந்த காலங்களில் சென்னையை ஒட்டி இருக்கக்கூடிய புறநகர் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையின் சேவையை பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள்….
அந்த வகையில் பயமை வாய்ந்த இந்த மருத்துவமனை கடந்த காலங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தது…
இந்த மருத்துவமனையில் 26 அறை ரூபாய் கோடி ரூபாய் மதிப்பில் 6 தளங்களுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது….
ஏற்கனவே 36 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இருந்தது, தினம் தோறும் 1000க்கும் மேற்பட்ட புறநானிகள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வந்த நிலை இருந்தது, தற்போது 1500 மேற்பட்ட புற நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள்…
மருத்துவ காப்பீடு திட்டம் :
வருகிற ஜனவரி திங்கள் பணிகள் நிறைவடைந்து தமிழ்நாட்டு முதல்வர் அவர்களால் இந்த மருத்துவமனை திறக்கப்பட உள்ளது.. திறந்து வைக்கும் பொழுது 200 படுக்கைகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட மருத்துவ சேவையை இந்த மருத்துவமனை வழங்க உள்ளது…
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மிகச் சிறப்பான வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது …
ஒன்றிய அரசின் இன்சூரன்ஸ் :
ஆண்டு ஒன்றுக்கு 1500 கோடி மேல் அரசாங்கம் தந்து இன்று ஒன்றிய அரசின் யூனிட்டட் இந்தியா இன்சூரன்ஸ் அமைப்பு சார்பில் இந்த காப்பீட்டு திட்டம் என்பது ஏறத்தாழ ஒரு கோடியே 44 லட்சம் குடும்பங்களைக் கொண்ட மிகப்பெரிய அமைப்பாக இருந்து கொண்டிருக்கிறது…
தமிழ்நாடு முழுவதும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 15 லட்சத்து 70 ஆயிரத்து 322 பேர் பயனடைந்துள்ளனர்… சைதாப்பேட்டை மருத்துவத்துறையில் ஒரு புகழ்குடி நாட்டிக்கொண்டிருக்கிறது…
1100 பேருக்கு ஆஞ்சியோ :
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 864 புறநோயாளிகள் பயனடைந்துள்ளனர், இது ஒரு வரலாற்றுச் சாதனை ஒரு புதிய மருத்துவமனை கட்டப்பட்டு ஓராண்டுக்குள்ளாகவே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்திருப்பது மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடையக் கூடிய ஒன்று….
75 ஆயிரத்து 316 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்…
இதுவரை 2800 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது… 9 லட்சத்து 19 ஆயிரத்து 84 இரத்த பரிசோதனைகள் நடைபெற்று இருக்கிறது…
திறந்து வைக்கப்பட்ட ஆறே மாதத்தில் ஆஞ்சியோ சிகிச்சையை 1,100 பேருக்கு செய்யப்பட்டு ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது…
கலைஞர் வாழ்நாள் சாதனை :
கலைஞர் எப்படி வாழ்நாள் முழுவதும், வாழ்ந்த காலம் முழுவதும் ஒரு சரித்திர சாதனை புருஷராக திகழ்ந்தாரோ வாழ்ந்தாரோ அவருடைய பெயரால் திறக்கப்பட்ட இந்த மருத்துவமனை வரலாற்றுச் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது, வரலாற்று சிறப்புமிக்க மருத்துவமனையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது….
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடைய ஆட்சி காலத்தில் செய்த சாதனையே தெரிந்து வைத்திருக்கவில்லை.. அம்மா கிளினிக் இருந்தது அம்மா மருந்தகம் என்று இல்லை அம்மா உப்பு கடை என்று வைத்திருந்தார்கள்…
ஒன்றிய அரசின் நிதி ஆதாரம் :
ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது, அம்மா மருந்தகம் என்று எந்த காலத்திலும் வைக்கவில்லை, ஜெயக்குமார் எந்த நினைப்பில் சொல்கிறார் என்று தெரியவில்லை, அம்மா கிளினிக் இருந்தது, ஒன்றிய அரசாங்கத்தின் நிதி ஆதாரத்தோடு ஒரு வருடத்திற்கு உண்டான அரசாணை பெற்று ஒரே ஒரு மருத்துவர் நியமனம் பெற்று எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தா கதையா மருத்துவமனைகளை வைத்தார்கள்…
காட்சிப்பொருள் :
இது சம்பந்தமாக எடப்பாடி பழனிச்சாமி பேசும்பொழுது சைதாப்பேட்டையில் ஒரு சுடுகாட்டில் வைத்துள்ளீர்கள் என்று சொன்னேன், உடனே இல்லை என்று கூறினார். நான் வாங்க அழைத்துச் சென்று காட்டுகிறேன் என்று தெரிவித்தேன், இன்னும் நாங்கள் அதைக் காட்சிப் பொருளாக வைத்துள்ளோம்…
அம்மா கிளினிக், பெரிய கட்டமைப்போடு விளங்கியது போலவும், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் வேலை செய்தது போலவும், அம்மா கிளினிக் முடிவிட்டதால் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிதைந்ததைப் போல எடப்பாடி பழனிச்சாமி பேசினார்…
அம்மா கிளினிக்கும், அம்மா மருந்தகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் காலத்தில் வந்தது என்று பேசுகிறார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
மக்கள் மருந்தகம் :
ஒரு புனித நோக்கத்தோடு, முதல்வர் இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள், தைப்பொங்கல் அன்று ஆயிரம் இடங்களில் மக்கள் மருந்தகம் பயன்பாட்டிற்கு வரும். இந்தத் திட்டத்திற்கும் அம்மா மருந்தகம் என்ற பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அம்மா மருந்தகம் என்ற பெயரே இல்லை….
எந்தத் துறையிலாவது அவர்கள் செய்ததை நாங்கள் செய்தோம் என்று சொல்ல முடியுமா… திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் ஜெயலலிதா அம்மையார் திறந்து வைத்து கல் வெட்டு வைத்துக் கொண்டார்கள்…
அம்மா மாளிகை பெயர் :
சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகை நான் இருந்த பொழுது 90 சதவீதம் முடிந்து விட்டது. ஆட்சி மாறியவுடன் அதற்கு அம்மா மாளிகை என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்… ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்று நாட்டுக்குத் தெரியும், ஜெயக்குமாருக்கு தெரியாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது என்று கூறினார்..
போலி மருத்துவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது யாராவது மாற்றினால் கண்டிப்பாக சிறைக்கு செல்வார்கள் என்று தெரிவித்தார்….
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..