திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோவில் திருவிழா..!
திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் மாங்கொட்டை திருவிழா நடைபெறும். மே 24 கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது.
தொடர்ந்து 11 நாட்களுக்கு இந்த திருவிழா நடைபெறும், நேற்று காலை திருவாதவூர் விநாயகர் கோவிலில் இருந்து, திருமறைநாதர் மற்றும் பெரியநாயகி அம்மாள் பல்லக்கில் வீதி ஊர்வலம் சென்றுள்ளார்.
பின் ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி பக்தர்கள் அனைவருக்கும் அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து மே 31 திருக்கல்யாணமும், ஜூன் 1 தேரோட்டம் நடைபெற உள்ளது எனவும். ஊர் தலைவர் தெரிவித்தார்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post