திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அக்னி பூஜை..!!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அக்னி நிவர்த்தி பூஜை இன்று நடைபெற்றது. மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தொடங்கிய நாளில் இருந்து, இன்று வரை மூலவருக்கு தாராபிஷேகமும் நடந்து வருகிறது.
இன்று அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி.., 1008 கலசங்கள் வைத்து.., சிறப்பு யாகம் நடத்தி பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் அருணாச்சலேஸ்வரர் வீதி ஊர்வலம் வந்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு.., சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post