நாவில் எச்சில் ஊறவைக்கும் உப்பு கறி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி – 1/2 கிலோ
வரமிளகாய் – 10 அல்லது 15
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையானது
இஞ்சி – பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை:
முதலில் கோழிக்கறியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் கறியை நன்றாக 3 முறை நீரில் கழுவி பின் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் சேர்த்து தாளித்து பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மஞ்சள்தூள், உப்பு,கறி சேர்த்து வதக்க வேண்டும்.
கறி நன்றாக வெந்ததும் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் உப்பு கறி தயார்.