இனி பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை..!! சொன்னதை நிறைவேற்றிய மம்தா…!!
பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு தூக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. அது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.. அதன் பின் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பல்வேறு ஆதரங்களை சேகரித்தனர்..
அது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும் தீவிர சோதனை நடத்தி நடத்தப்பட்டதில் பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறு ஆய்வில் வெளியானது..
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையையே ஏற்படுத்தியது., அதே சமயம் அம்மாநிலத்தின் முதல்வர் “மம்தா பேனர்ஜிக்கு” எதிராக குரல் எழுப்ப தொடங்கினார். மேலும் அவர்கள் பதவி விலக வேண்டுமென தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்..
இந்தநிலையில், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலுக்கு எதிரான குற்றங்களை மேற்கு வங்க சட்டப்பேரவையில் 2024 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதா சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த மசோதா குறித்த விவாதம் இன்று நடைபெற்றது, அப்போது சட்டசபையில் இன்று பாலியல் வன்கொடுமை செய்வர்களுக்கான தண்டனை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பெண்கள் பாதுகாப்பு மசோதாவானது நிறைவேற்றவே முடியாது என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் நாங்கள் அதை நிறைவேற்றி விட்டோம்..
இந்த மசோதாவின் மூலம் முதற்கட்ட அறிக்கையை காவல்துறை வழங்கிய பின்பு 21 நாட்களில் தண்டனை வழங்கப்படும் எனவும், பெண்கள் பாதுகாப்பு சிறப்புப் படை உருவாக்கப்படும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..