அரிசி இல்லாத மொறு மொறு தோசை செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு 1 கப்
உளுந்து அரை கப்
சீரகம் 1 ஸ்பூன்
இஞ்சி நறுக்கியது 1 துண்டு
பச்சை மிளகாய் 1
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
வெங்காயம் 1 நறுக்கியது
எண்ணெய் தேவையானது
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் பச்சை பயிறை நீரில் கழுவி அதனை தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரத்திற்கு நன்றாக ஊற வைக்க வேண்டும்.
மற்றொரு கிண்ணத்தில் உளுந்து அரை கப் எடுத்துக் கொண்டு அதையும் நீரில் கழுவி தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பின் மூன்று மணி நேரத்திற்கு பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் உளுந்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனை தனியே ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
அதே மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சை பயிறை சேர்த்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனையும் அரைத்த உளுந்து மாவுடன் சேர்த்து ஊற்ற வேண்டும்.
பின் இரண்டையும் நன்றாக ஒன்று சேர கலந்து எட்டு மணி நேரத்திற்கு நன்றாக ஊற விட வேண்டும்.
எட்டு மணி நேரத்திற்கு பின்பு பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகம் ஒரு ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விட வேண்டும்.
பிறகு அதில் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
இப்போ பச்சை பயிறு தோசை மாவு தயாராக உள்ளது.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் மாவில் ஒரு கரண்டி எடுத்து தோசைக்கல்லில் தோசை ஊற்றி அதற்கு மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி தேவையான அளவிற்கு எண்ணெய் தடவி நன்றாக மொறு மொறுவென்று சுட்டு எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுட சுட மொறுமொறு அரிசி மாவு இல்லாத பச்சை பயிறு தோசை தயார். இதற்கு கார சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி ஆகியவை சாப்பிட அருமையாக இருக்கும்.