சுவையான வெஜிடபிள் சப்பாத்தி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 1 கப்
வேகவைத்த காய்கறிகள் 1 கப்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
மிளகுத்தூள் 1 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
வெங்காயம் 1 ஸ்பூன் நறுக்கியது
பச்சை மிளகாய் 2 நறுக்கியது
மல்லித்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
செய்முறை:
கலந்த காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் வேகவைத்த காய்கறிகள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு, சீரகத்தூள், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, வெங்காயம் ஆகியவற்றை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு கப் கோதுமை மாவினை இதில் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
மாவினை அப்படியே 15 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
பின் மாவினை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
அந்த உருண்டைகளை கைகளால் வட்டமாக தட்டிக் கொள்ள வேண்டும்.
இதுபோலவே அனைத்து உருண்டைகளையும் தட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சப்பாத்தியை போட்டு எண்ணெய் தடவி இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
மற்ற சப்பாத்திகளையும் இதுபோலவே வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் வெஜிடபிள் சப்பாத்தி தயார், இதனுடன் தயிர் தொட்டு சாப்பிடலாம்.
வெறுமெனவும் சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.