எளிமையாக வீட்டிலே காஜூ கட்லி செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
முந்திரி – 1 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
மிக்ஸியில் முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின் சர்க்கரை கரைசலில் அரைத்த முந்திரி பொடியை சேர்த்து கிளறவும்.
பின் இது மிருதுவாக மாற நெய் சேர்த்து கிளற வேண்டும்.
இக்கலவை மாவு பதம் வந்தவுடன் நெய் தடவிய பட்டர் பேப்பரில் ஊற்றி பின் பேப்பரை மூடி சப்பாத்தி கட்டை வைத்து சற்று தடிமனாக தேய்க்கவும்.
பின் இதனை உங்களுக்கு பிடித்த வடிவில் நெய் தடவிய கத்தியால் வெட்ட வேண்டும்.
அவ்வளவுதான எளிமையாக உடனே செய்யலாம் காஜூ கட்லி.