காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த 14 வயது சிறுமி.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
கொல்கத்தாவைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் 14 வயது மகளுடன் பெஹாலா பகுதியில் வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் ஜூன் 6ம் தேதி 54வயது பெண் திடீரென உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சில தினங்களகவே மன வேதனையில் இருந்த அவரது கணவன் மன வேதனை தாங்க முடியாமல் தனது மனைவி இயற்கையாக இறக்கவில்லை எனது மகள் மற்றும் அவரது காதலன் சேர்ந்து கொலை செய்தாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் மகளை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.
அதாவது 14 வயதான சிறுமி தனது காதலான மற்றொரு சிறுவனுடன் இணைந்து தாயை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி இருவரும் சேர்ந்து தனது தாயைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க பெஹாலா பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் அவரது மரணம் இயற்கையானது என்று போலி சான்றிதழ் வாங்கி அந்தத் தாயை அடக்கமும் செய்தது தெரியவந்தது.
மேலும் இதனை வெளியே கூறினால் தந்தையையும் கொலை செய்துவிடுவதாக இருவரும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன தந்தை இரண்டு மாதங்களாக யாரிடமும் இது குறித்து சொல்லாமல் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில் சிறுமியின் காதலனையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் இன்று சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன. அவர்களிடன் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”