ADVERTISEMENT
லக்ஸா ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி..? வாங்க பார்ப்போமா..!
தேவையானப் பொருட்கள்:
• 1 கோப்பை (140 கிராம்) குறைந்தபட்சம் 3 மணிநேரம் குளிர்சாதனத்தில் வைக்கப்பட்ட, சமைத்த பழுப்புஅரிசி.
• 300 கிராம் சுத்தம் செய்யப்பட்ட இறால்.
• 1 துண்டு நறுக்கிய மீன் கேக்
• 100 கிராம் தவ்கே
• ½ துருவிய வெள்ளரிக்காய்
• 1 கலக்கிய முட்டை
• 1 கொத்து நறுக்கிய லக்ஸா இலைகள்
• 2 தேக்கரண்டி எண்ணெய்
• 1 நடுத்தரமாக நறுக்கிய வெங்காயம்
• 50 மில்லிலிட்டர் குறைந்த கொழுப்புள்ள தேங்காய்ப்பால்
• 2 தேக்கரண்டி கழுவி, நீர் இல்லாமல் தட்டி, உலர வைக்கப்பட்ட இறால்கள்
• 1 தண்டு கத்தியின் பின்புறத்தால் நசுக்கப்பட்ட சிராய்
• 2 மேசைக்கரண்டி லக்ஸா பேஸ்ட்
• மிளகு காரத்திற்கு ஏற்றவாறு
செய்யும் முறை:
1. ஒரு வாணலை அடிப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மென்மையாக ஆகும்வரை வதக்கவும்.
2. பிறகு உலர்ந்த இறால்களை சேர்த்து, 2-3 நிமிடங்களுக்கு வெங்காயத்துடன் வதக்கவும்.
3. லக்ஸா பேஸ்ட், சிராய் மற்றும் லக்ஸா இலை ஆகியவற்றில் பாதியைச் சேர்த்து, நன்றாக வாசனை வரும்வரை வதக்கவும்.
4. பின் அத்துடன் குறைந்த கொழுப்புள்ள தேங்காய்ப் பாலைச் ஊற்றி நன்றாகக் கலக்கி விடவும். பிறகு தவ்கே, வெள்ளரிக்காய் மற்றும் மீன் கேக்கைச் சேர்க்கவும்.
5. அடுத்தது இறால்கள், மீதமுள்ள லக்ஸா இலைகள் மற்றும் பழுப்பு அரிசியைச் அதில் சேர்க்கவும். இறால்கள் வேகும்வரை வதக்கவும்.
6. முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்து சாதத்தில் ஊற்றி கிளறவும்.
7. உங்களுடைய காரத்திற்கு ஏற்றவாறு மிளகு சேர்த்து நன்றாக கிளறவும்.
8. அடைசியாக சாதத்தில் சுருள் வெங்காயங்களைக் கொண்டு அலங்கரிக்கவும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)