பிரியாணியை மிஞ்சிடும் இந்த புதினா சாதம்..!
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 20 பல்
இஞ்சி – 10 கிராம்
தேங்காய் துருவல் – 1 கப்
பட்டை – 1
லவங்கம் – 1
அன்னாச்சி பூ – 1
மிளகு – 1
சோம்பு – 1 ஸ்பூன்
பிரியாணி இலை – 1
நெய் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
தண்ணீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
பாஸ்மதி அரிசியை முதலில் நீரில் அலசி 10 நிமிடம் நீரில் ஊறவைக்க வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, லவங்கம், அன்னாசிபூ, மிளகு சேர்த்து தாளித்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்ததாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் தேங்காய் துருவல், புதினா, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
வதக்கியவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, சோம்பு, கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் ஊறவைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சரிபார்த்து குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்களுக்கு வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.
பின் குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து லேசாக கிளறிவிட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான புதினா சாதம் தயார்.