பூட்டி சீல் வைங்க சார்..!! கொந்தளித்த கொடுங்கையூர் மக்கள்..!! பிரியாணிக்கடையில் நடந்தது என்ன..?
எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 27 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி., நோட்டீஸ் அனுப்பியும் பொருட் படுத்தாத பிரியாணி கடை..
கடந்த சில மாதங்களாகவே உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ரோட்டுகடைகள் முதல் பெரிய பெரிய உணவகம் வரையிலும் அதிரடியாக சோதனை நடத்தி சுகாதாரமற்ற முறையில் தாயார் செய்யும் உணவகங்களுக்கு பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கொடுங்கையூரில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பிரபல எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையில் நேற்று முன்தினம் இரவு பிரியாணி சாப்பிட்ட தனது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி வாடிக்கையாளர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்..
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்., பாதிக்கப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு கூறியுள்ளார்.. ஆனால் பாதிக்கப்பட்ட நபர் தன் உறவினர்களுடன் கடையை பூட்டி சீல்வைக்குமாறு சண்டையிட்டுள்ளனர்..
அதையடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னரே பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது., மற்ற உணவகங்களை போல எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையில் தயார் செய்யப்படும் பிரியாணி ஆனது உணவகத்தில் வைத்து தயார் செய்யப்படவில்லை என்பதும்., அலமாதியில் உள்ள பொது சமையல் கூடத்தில் வைத்து தயார் செய்து பின் மற்ற சமையல் கூடங்களுக்கு அனுப்புவதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.,
அதன் பின் ஹோட்டலை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும் எதை செய்யவேண்டும் செய்யக்கூடாது என்று ஒரு அறிக்கை நோட்டிஸ் கொடுத்து எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
ஆனால் நேற்று சென்னை திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அப்பு பிரியாணி கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள் “சமையல் கூடத்தில் உணவு சுகாதாரமின்றி பிரியாணி சமைத்ததாக கூறி, சமையல் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இன்ஸ்ட்டா கிராம் மூலம் பேமஸ் ஆன அப்பு பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பிரபலமான கடை என்றால் வார்னிங்.., கஷ்டப்பட்டு முன்னேறும் மக்கள் என்றால் சீல் வைப்பீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..