வித்தியாசமான முட்டை 65 செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
முட்டை வறுக்க:
வேகவைத்த முட்டை 6
இஞ்சி சிறிது
பூண்டு சிறிது
பச்சை மிளகாய் 3
வெங்காயம் 1
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி இலை சிறிது
உப்பு தேவையானது
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
கரம் மசாலா அரை ஸ்பூன்
கடலை மாவு 1கப்
சீரகத்தூள் அரை ஸ்பூன்
முட்டை 65 செய்ய:
எண்ணெய் தேவையானது
வெங்காயம்
பூண்டு
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
மிளகாய்த்தூள்
தக்காளி சாஸ்
செய்முறை:
வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை எடுத்துவிட்டு வெள்ளை கருவை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதில் முட்டை வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
பின் கடலை மாவை அதில் சேர்த்து நீரை சிறிது கலந்து திக்கான கலவை தயாரித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் இந்த கலவையை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை பொரித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் முட்டை 65 செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் மிளகாய்த்தூளை இதில் சேர்த்து வதக்கி அதில் பொரித்த முட்டை சேர்த்து, தக்காளி சாஸ் ஊற்றி கிளறி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான முட்டை 65 தயார்.