அமேசான் நிறுவனத்திற்க்கு ஒரே நாளில் 5.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே அறிவிப்பில் 18,000 ஊளியர்களை நீக்கியதால் ஏற்பட்ட எதிரோலி.
அமேசான் நிறுவனம் தந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து தங்களது ஊளியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அதற்கு பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் என்பதால் அதனை கருத்தி கொண்டு பணியாளர்களை நீக்க முடிவு செய்யப்பட்டதாக அமேசான் நிறுவனம் விளக்கம் தெரிவித்து , 18,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது.
இந்நிலையில் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டதன் எதிரொலியாக அமேசான் நிறுவனத்துக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 5.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலக பணக்காரர்கள் வரிசையில், 6-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பிஸோஸ் சொத்து மதிப்பு 106 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனத்துக்கு 834 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post