புரொபஷனல் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சோதனையில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது
நுங்கம்பாக்கம், கத்தீட்ரல் கார்டன் சாலையில் உள்ள ப்ரொபஷனல் கூரியர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுட்டு தீவிர சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா காலகட்டத்தில் முறையான வருமான வரி செலுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், நகை, பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 3வது நாளாகா இன்றும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். நுங்கம்பாக்கம், கிண்டி, பிராட்வே, ஆழ்வார்பேட்டை உள்பட சென்னையில் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 30 இடங்களில் நடக்கும் சோதனையில் வரி ஏய்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் கைப்பற்றபட்ட பணம், நகை ஆகியவைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.