மழையில் மூழ்கும் சென்னை என்ற காலம் மாறிவிட்டது..!! இப்பொது சென்னையே..?
மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்கவே திராவிட மாடல் அரசு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மழை காலங்களில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தாழவான பகுதிகளில் வெள்ளம் தேங்கிவிடும். ஆனால், தற்போது கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டதால், பல இடங்களில் கனமழை பெய்தாலும் ஓரிரு மணி நேரத்தில் மழை வெள்ளம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம் என்றும், தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும், மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிடன் மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..