“சிக்கு புக்கு.., சிக்கு புக்கு ரயிலே”.., நாளை முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள்..?
வேளச்சேரி டூ பிரங்கிமலை இடையே உள்ள 5கிமீ தூரத்திற்கு பறக்கும் ரயில் மேம்பாலா பாதை திட்டப்பணி 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.., இந்த ரயில்வழி தடம் வழியே கடந்த ஆண்டு முதல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது..
பரங்கிமலை டூ வேளச்சேரி மேம்பாலம் வழியே ரயில் பாதை திட்டம் 734 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையில் தூண்கள் இணைக்கப்பட்டுள்ளன.., மொத்தம் உள்ள 5கிமீ தூரத்தில் 167 தூண்களுடன் ரயில்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது..
இந்த வழித்தடம் வழியே ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில்நிலையங்கள் அமைப்பாதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி மேம்பாலம் ரயில்வழி தடத்தை இணைக்கும் பணியும் தொடங்கிவிட்டது.
மொத்தம் இரண்டு கட்டங்களாக பணிகள் நடந்து முடிந்தது.., இதுகுறித்து.. தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது..
இன்று காலை மூன்று மணி முதல் கடற்கரை டூ தாம்பரம் வழிதடத்தில் பரங்கிமலை ரயில்நிலையம் வழியாக இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து நாளை முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நாளை முதல் இயங்கும் எனவும்.., மெட்ரோ ரயில் சேவை முடிந்ததும் மின்சார ரயில்சேவைகள் இயங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post