ஈசியாக நீங்களும் சமையல் ராணி ஆகலாம்..!
மீன், கறி போன்ற உணவுகளை சமைக்கும்போது உப்பு நீரில் அலசி பின் அரிசி கழுவிய நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின் சமைத்தால் நீச்ச வாடை வராது.
குலோப்ஜாமுன் மாவு பிசையும்போது தண்ணீருக்கு பதிலாக பால் சேர்த்து பிசைந்து கடைசியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பிசைந்து சுட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
பிரியாணி செய்யும்போது தண்ணீர் பாதி, தேங்காய் பால் பாதி மேலும் ஒரு கப் தயிர் சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.
மட்டன் குழம்பு செய்யும்போது சிறிது கொழுப்பு சேர்த்து செய்தால் சுவையும் அதிகமாகும் எண்ணெயும் அதிகமாக தேவைப்படாது.
முட்டை பயன்படுத்தி எந்தவொரு உணவு செய்தாலும் சிறிது மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து செய்தால் கவுச்ச வாசனை வராது.
பொரித்த ஜாமுன்களை சூடாக சர்க்கரை பாகில் சேர்க்காமல் நன்றாக ஆறிவுடன் சேர்த்தால் விரியாமல் இருக்கும்.
பாகற்காய் பொரியலில் அதிக அளவில் வெங்காயத்தை சேர்த்து செய்தால் கசப்பு தன்மை இருக்காது.
சேப்பங்கிழங்கை ரோஸ்ட் செய்யும்போது சிறிது ரஸ்க் பொடியாக்கி சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
தண்டு கீரையின் தண்டை வீணாக்காமல் புளிக்குழம்பில் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
மட்டன் சூப்பில் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை அரைத்து சேர்த்தால் சூப் ருசியாக இருக்கும்.
எலுமிச்சை சாதம் செய்யும்போது நறுக்கிய இஞ்சி மற்றும் தட்டிய பூண்டு சேர்த்து செய்யும்போது சாதம் சுவை கூடுதலாக இருக்கும்.