புத்தாண்டு நாளில் இவரை வழிபட்டால் போதும்..!! பண வரவு அதிகரிக்க வழி..!!
இன்று தமிழ்புத்தாண்டு.., இன்றைய நாளில் நாம் வழிபட வேண்டிய கடவுள் “விநாயக பெருமாள்” காரணம் எல்லோருக்கும் மூத்த கடவுளான அவரை வழிபட்டு இன்றைய வருடத்தை தொடங்கினால்.., இந்த வருடத்தில் உங்களுக்கான சங்கடங்கள் தீரும்.
காலையில் நாம் வீட்டில் பூஜைகள் செய்து தீப ஆராதனை காண்பித்து வழிபாடு செய்வோம்.., அது எந்த அளவிற்கு வீட்டில் மன நிறைவை தருகிறதோ அதே அளவிற்கு மாலையிலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
அதாவது மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கு ஏற்றி தீப ஆராதனை செய்வது பலன் என்றால்.., மாலை 6 மணிக்கு மேல் “சிவன் கோவிலுக்கு சென்று வில்வ இலையால் அர்ச்சனை செய்து நந்தி பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி” வழிபட்டால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
எந்த மதத்தினாராக இருந்தாலும் இன்றைய நாளில் அதவாது இந்த வருடம் உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.., அதற்கு ஏற்றார் போல் உங்களின் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள்.., ஆனால் அதே சமயம் இறைவனின் முழு அருளும் கிடைக்க..,
இன்று வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்து வழிபட்டால் இறைவனின் ஆசி கிடைக்கும்.., காரணம் இன்றைய நாளில் நம் வீட்டில் மாய்ந்த நம் முன்னோர்கள் ஐந்து அறிவு கொண்ட ஜீவன்கள் ரூபத்தில் வந்து நம்மை வாழ்த்துவார்க்களாம் எனவே, மதியம் வேலையில் ஐந்து அறிவு கொண்ட ஜீவன்களுக்கோ அல்லது வயதானவர்களுக்கோ அன்னம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மாலை சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் பக்தர்கள் பசு மாட்டிற்க்கு அகத்தி கீரை கொடுத்து வழிபட்டால் உங்களை சுற்றியுள்ள பிரச்சனைக்கள் ஒரு முடிவிற்கு வரும்..,
குறிப்பாக இன்று நாம் வீட்டில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதை விட நெய் விளக்கு போட்டு தீபம் ஏற்றினால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
அலுவலகத்தில் இன்று குபேரனுக்கு பூஜை செய்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காசு வைத்து வழிபட்டால் லாபம் அதிகரிக்கும் கடன் குறையும்..
ஜாதி மதம் இவைகளை கடந்து ஒரு மனிதனாக சகோதர துவத்துடன் நம்மிடம் உறவாக பழகி கொண்டிருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் மதிமுகம் சார்பாக “இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்“..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..