பெண்களின் சிறுநீர் தொற்று பிரச்சனைக்கு தீர்வு..!
உடல் ரீதியாக எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் .., வாய் விட்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பிரச்சனை தான் “சிறுநீர் தொற்று”. சிறுநீர் தொற்று பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த பிரச்சனை ஏற்பட்டவுடன் அதை பல பெண்கள் அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
அதற்கான காரணம் சிறுநீர் தொற்று பற்றிய அறிகுறிகள் தெரியாதது தான்.
சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உண்டாவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுவது, இவை அனைத்தும் சிறுநீர் தொற்றின் அறிகுறிகள் ஆகும். இந்த மாற்றங்கள் இருந்தால், நிச்சயம் நீங்கள் சிறுநீர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளீர்கள்.
அதை சரி செய்ய இதை மட்டும் செய்யுங்கள்.
* நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருக்க கூடாது மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் ஒரு நீர்ச்சத்து நிறைந்த ஜூஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அதிக காரணமான உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.
* சுகாதாரமற்ற கழிப்பறைகளை உபயோகிக்க கூடாது.
* யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஆண்டிபையாட்டிக் மருந்துகள் இவற்றை விரைவாக சரி செய்துவிடும்.
* யூரினரி இன்ஃபெக்ஷன் ஆரம்பத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று.., அதை கவனிக்காமல் விட்டால் ரத்தக்கசிவு மற்றும் வாந்தி மயக்கம் போன்றவை ஏற்படும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி