வீட்டில் இந்த பொருள் இருந்தால் பாம்பு வராது..!
பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என்கிறார்கள், அப்படி பாம்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன ஆகும் என்று யோசித்தாலே பயமாக இருக்கிறது.
பாம்புகள் பொதுவாக நகரங்களை விட கிராமங்களில் அதிகமாக வருகிறது, எனவே அப்படி பாம்புகள் உங்களுடைய வீடுகள் மற்றும் தோட்டங்களில் வராமல் இருக்க ஒரு சில வழிமுறைகளை நீங்கள் கடைப்பிடித்தாலே இதை தவிர்க்கலாம்.
பூண்டின் வாசனை பாம்புகளுக்கு மிகவும் அலர்ஜி எனவே பூண்டினை நசுக்கி தண்ணீரில் கரைத்து வீட்டில் செடிகளில் ஊற்றி விடவும்.
பாம்புகளுக்கு புதினா வாசனை பிடிக்கவே பிடிக்காது எனவே உங்கள் வீடுகளின் ஓரங்கள் மற்றும் தோட்டத்தில் புதினா செடிகளை வளர்த்து வர பாம்புகள் உங்கள் தோட்டம் மற்றும் வீட்டிற்கு வரவே வராது.
பேபி ஷாம்புவை நீரில் கரைத்து அதனை உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளின் மீது ஸ்ப்ரே செய்து விடலாம்.
திரும்பவும் மூன்று மணி நேரம் கழித்து மறுபடியும் செடிகளின் மீது நீரை தெளித்து விடலாம். இந்த ஷாம்பு வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது எனவே உங்கள் வீட்டு தோட்டத்தில் பாம்புகள் வராது.
புகையும் பாம்புகளுக்கு எதிரி தான். புகைக்கும் பாம்பு வராது.
கிராம்பு, புதினா, துளசி, எலுமிச்சை, வினிகர், இலவங்கப்பட்டை ஆகியவற்றில் இருக்கும் அம்மோனியா வாயு பாம்புகளுக்கு பிடிக்காது.
எனவே வீடுகளை சுற்றி மற்றும் வீட்டுக்குள் இந்தவகை பொருட்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.