முகம் பளப்பளக்க இத செய்ங்க..!
முகம் சுத்தமாகவும் அழகாகவும் வசீகரமாகவும் இருக்க எலுமிச்சை சாறு மற்றும் புதினா சாறுகளை சூடான நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆவி பிடித்து வரலாம்.
கசகசாவை நீரில் சிறிது ஊறவைத்து பின் அதை விழுதாக அரைத்து அந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசி வர முகம் பளிச்சென்று மாறுவதை பார்க்கலாம்.
தக்காளி சாறுடன் சிறிது எலுமிச்சை துளிகள் கலந்து அதனை ஒரு பஞ்சில் நனைத்து அதனை முகத்தி தடவி காயவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை அலசி வரலாம்.
தக்காளியில் இருக்கும் சாலிசிலிக் அமிலம் முகப்பருக்களை போக்குகிறது. இதனை வாரத்திற்கு இருமுறை செய்து வர முகத்தில் இருக்கும் துளைகள் சுருங்கி போவதை காணலாம்.
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது ஆகியவற்றை சம அளவில் எடுத்து முகத்தில் பூசி வர முகம் பிரகாசமாகவும் பொலிவாகவும் மாறும்.
ஆப்பிள் இலைகளை நன்றாக உலர காயவைத்து அதை அரைத்து பின் தலைக்கு குளிக்கும் ஷாம்பு மற்றும் சீயக்காயில் கலந்து தலையை அலசி வர கூந்தல் மென்மையாக மாறும்.