பெண்கள் திருமணத்தை வெறுக்க காரணம்..!
உறங்கும் கால மாற்றத்தை எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம். கம்ப்யூட்டரில் நள்ளிரவுக்கு மேல் வரை வேலை செய்துவிட்டு, பின்னர் படுத்தவுடன் உறக்கம் வராது. அதிகாலை நேரம்தான் தூங்கவே ஆரம்பிப்பார்கள். ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, காபி போட்டு கொடுக்கும் வேலையெல்லாம் செய்ய இன்றைய இளம் பெண்கள்.. சான்ஸே இல்லை ராஜா.
பாரம்பரியமான உணவு முறைகள் எல்லாம் மாறி பிரட், டோஸ்ட், சாண்டவிச், ஆம்லெட், ஜூஸ், பழம், நட்ஸ்.., மதியம் ஆபிஸ் கேட்டீன், ஆர்டர் செய்த உணவுகள், மாலை வரும் போதே வெளியில் டிபன், ஸ்நாக்ஸோ… இரவில் எனக்கு தேவையானதை நான் செஞ்சுக்கறேன். உங்களுக்கு என்ன வேணுமோ அதை நீங்கள் செஞ்சுக்கோங்க, சரியா..? குட்நைட். அடுத்த நொடியே கதவு அடைத்துக் கொள்ளும்..
உடையும், பேச்சும் அடுத்த பிரச்சனைகள். எனக்கு இதுதான் வசதியா இருக்கு. எப்பவும் துப்பட்டா போட்டுக்க சொல்லி போர்ஸ் பண்ணாதீங்க. எத எப்ப போடணும்னு எங்களுக்கு தெரியும். இந்த வார்த்தை எல்லாம் எங்களுக்கு சகஜம்.
இங்லிஷ்ல பேசினா உங்களுக்கு ஏன் எரியுது..? உங்க காலத்து பாஷை பேசினா, எனக்குலாம் பிரண்ட்ஸ் சர்கிளே இல்லாம போயிடும். Bad words பேசலைனா, ஒருத்தனும் நம்மள மதிக்கவும் மாட்டான்.
பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் :
ஐ. டி. யில் வேலை செய்யும் 75% க்கு மேல் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் இவை. புகுந்த இடத்தில் உள்ள மூத்த பெண்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு , வந்த பெண்களிடம் அதிகம் எதிர்பார்க்காமல் அனுசரித்து நடந்தால் மட்டுமே நிம்மதி சாத்தியம்.
இல்லை எனில், இருவர் பிழைப்பும் நாறித்தான் போகும். இடையில் புருஷனும் , குழந்தைகளும் பாவமோ பாவம்..!
எல்லாம் தாண்டி தான், சம்பளம். சம்பாத்தியத்தை புருஷனுக்கும், அவன் குடும்பத்திற்கும் பங்கு போட, மனதில்லை. பொறுமையோ, சகிப்புத் தன்மையோ, விட்டுக் கொடுக்கும் மனப் பக்குவமோ, பகிர்ந்து உண்ணும் மனமோ இல்லாத இந்த தலைமுறை பெண்கள்….
தங்களது சுகத்தையும், சுதந்திரத்தையும் அணு அளவு கூட விட்டுக் கொடுக்க மனதில்லை, வேலையில் இருக்கும் தற்போதைய தலைமுறை பெண்களுக்கு. திருமணம் என்றாலே, பொறுப்பும் கடமை உணர்வும், கூடவே வரும் என்பது தெரிந்தே, அதை விட நாம் சும்மா இருப்பதே சுகம் என்ற மனநிலையில் இருப்பது சுகம் தான்.!
இதே மன உறுதி கடைசி வரை எல்லோருக்கும் இருக்க வேண்டுமே..!
வயதும் இளமையும் போன பின்பு, பாதுகாப்பின்றி, உடல் நலக் கோளாறு ஏற்படும் போது, துணைக்கு மனம் ஏங்கும்… தவிக்கும்… ஆறுதலாய் பேச, அரவணைத்து நடக்க, நண்பர்களை தேடி அலையும் போது…., கிடைத்தால் நலம்.
இல்லை என்றால்…? எல்லாவற்றுக்கும் வழி இருக்கிறது.
அமைதியும், திருப்தியும், அன்பும், பாதுகாப்பும் இருக்குமா..?
யோசித்து, முடிவெடுக்க வாழ்த்துக்கள்..!
– வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..