கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அடுத்த லிஸ்ட் ரெடி..!! இதை படிக்க மறக்காதிங்க..!!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அக்டோபர் மாதத்தில் மட்டும் கூடுதலாக 5,041 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தகுதியான பயனாளி ஒருவர் கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவிகளை கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயணாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், உரிமைத்தொகை பெற்றுக் கொண்டவர்களில் இறந்து போனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து செப்டம்பர் 18-ம் தேதி முதல் குறுந்தகவல்கள் அனுப்பப்படும் என்றும், 18ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுவரை கிட்டத்தட்ட 9.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..