சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு..!! குவிந்த பக்தர்கள்..!! எத்தனை நாட்கள் வரை பக்தர்களுக்கு அனுமதி..?
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
நாளை முதல் 5 நாட்கள் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெறவுள்ளது.
22-ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பேருந்துகள் சபரிமலைக்கு இயக்கப்படுகின்றன.
இதற்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் இன்று முதல் செயல்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Discussion about this post