திடீர் பயணம் செல்லும் முதலமைச்சர்..!! இது நம்ப லிஸ்ட்லையே இல்லையே..?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
சென்னை டூ மறைமலைநகர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை, மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்..
இந்த திடீர் ஆய்வு இன்று முதல் இன்னும் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.. இந்த திடீர் ஆய்வு கூட்டம் இன்று மற்றும் நாளையும் மறைமலை நகரில் உள்ள “ஊரக பயிற்சி நிலையத்தில்” ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்..
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள்.., திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்..
இந்த திடீர் ஆய்வின் மூலம் மக்களுக்கு செய்துள்ள நல திட்டங்கள் நல்லபடியாக சென்றுள்ளதா.., அல்லது அந்த திட்டங்களுக்கான சலுகைகள் செய்யப்படாமல் இருக்கிறதா என்பதை நேரடியாக மக்களிடமே சென்று விசாரிபதற்காக செல்ல இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..