இந்தியாவில் ஒரேநாளில் 63 பேருக்கு ஜெஎன் 1 கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக பரவும் ஜெஎன்.1 ( JN1) வகை கொரோனாவால் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் புதிய வகையான ஜெஎன்.1 (JN1) தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் கேரளத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு இத்தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 63 பேருக்கு ஜெஎன் 1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், கோவாவில்-34 பேருக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் 9 பேருக்கும், கர்நடாகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழகத்தில் 4 பேருக்கும் ஜெஎன் 1 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, உரிய பொது சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.
இதனிடையே ஓமைக்ரான்
மாறுபாடுகளை எதிர்கொள்வதற்காக தடுப்பூசியை கொண்டு வருவதற்கான பணிகளை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தொடங்க உள்ளது என தகவல் வெளியானது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான மற்றும் புதிய வகையான ஜெஎன்.1 (JN1) எதிரான தடுப்பூசியின் கூடுதல் நான்காவது பூஸ்டர் டோஸ் தேவையில்லை என்றும், பூஸ்டர் டோஸ் பரிந்துரைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், கூட்டம் அதிகமான இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.