தமிழிசை ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும் என சேகர் பாபு பதிலடி…
தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மழை, வெள்ள பாதிப்பை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளதாகவும், மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய சேகர் பாபு, தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும் என்றும், பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.