இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு…
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் லோகேஷ், பரத்குமார், மற்றும் சரத்குமார் ஆகிய மூன்று இளைஞர்களும் செய்யாரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மாங்கால் கூட்ரோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த வெங்கடேசன் என்ற கூலித் தொழிலாளியின் இருசக்கர வாகனமும் அழிஞ்சல் பட்டு அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லோகேஷ் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த பரத்குமார் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)