ADVERTISEMENT
ஆளுநர் ஆர்.என்.ரவி 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறார்??
ஆளுநர் ஆர்.என்.ரவி 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எந்த காரணமுமின்றி மசோதாக்களை ஆளுநர் நிராகரித்துள்ளார் என்றும், ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வந்துகொண்டிருக்க முடியாது எனவும் தமிழக அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றம் நவம்பர் 10ஆம் தேதி ஆளுநர் தரப்பு பதிலளிக்க பிறப்பித்த பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என்றும், மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு எனவும் கேள்வி எழுப்பினர்.
3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின் படி, மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக கூற முடியாது என தெரிவித்த நீதிபதி, தமிழ்நாடு அரசின் ரிட் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
