ADVERTISEMENT
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை”
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக கடற்கரைப் பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும், குமரிக்கடல் பகுதியில் மற்றுமொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
அடுத்த 24 மணி நேரத்தில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில், மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில பகுதிகளில் சற்று பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவித்தார்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சாத்தான்குளம் 12 செ.மீ., திருச்செந்தூரில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.