வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக பலி…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் சீனிவாசன், சசி ஆகியோர் செட்டியப்பணுர் கூட்டு சாலையில் இருந்து வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளனது.
இதில், சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சசி படுகாயமடைந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் படுகாயமடைந்த சசியை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
மேலும் உயிரிழந்த சீனிவாசன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.