பழனி முருகன் கோவிலில் கருவறையை போட்டோ எடுத்த சிறுமி..!! கேள்வி கேட்ட அர்ச்சகரை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்த தந்தை..!!
பழனி முருகன் கோவிலில் பெற்ற மகளை கோவில் ஊழியர் ஒருவர் வெளியே தள்ளி விட்டதால் அவர் மீது போக்சோ வழக்கு பதிய வேண்டும் என செந்தில் குமார் புகார் அளித்துள்ளார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் 100 ரூபாய் கட்டணத்தில் முருகரை தரிசனம் செய்வதற்காக செந்தில் குமார் சென்றுள்ளார். 100 ரூபாய் தரிசனத்திலும் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. வேகமாக வரிசை சென்று கொண்டிருந்த போது செந்தில் குமார் மற்றும் அவரின் மகள் முருகரை தரிசனம் செய்த படி நின்றுள்ளனர்.
ஒரு நிமிடம் முழுமை அடைவதற்கு முன் கோவில் நிர்வாகி சிவா, செந்தில் குமாரையும் அவரின் மகளையும் பிடித்து வெளியே தள்ளி இருக்கிறார்.., எதற்காக எங்களை பிடித்து வெளியே தள்ளுறீங்க கால் வலிக்க வரிசையைல நின்னு வர்றது எதுக்கு சுவாமிய தரிசனம் செய்றதுக்கு தான.., ஏன் இப்படி நடந்துக்குறீங்க என்று செந்தில் குமார் கேட்க.
ரொம்ப சட்டம் பேசாதீங்க.., உங்க பொண்ணு சுவாமிய போட்டோ எடுத்த அதான் வெளியே தள்ளுன என நிர்வாகி கூறியுள்ளார். மேலும் செந்தில் குமாரிடம் தரக்குறைவாக பேசியதால், ஆத்திரமடைந்த செந்தில் குமார் கோவிலுக்கு வெளியே இருந்த காவலரிடம் புகார் அளித்துள்ளார்.
என் மகள் முருகரை போட்டோ எடுத்தாக கூறுகிறார்.., அதனால் தான் அவரை தள்ளி விட்டேன் பின்னே வரும் பக்தர்களிடம் மாலை கொடுத்து முறையாக தான் நடந்து கொண்டேன் என சொல்லுகிறார்., அவர் சொல்லும் அனைத்தும் “பொய்” நீங்கள் கோவிலில் இருக்கும் சிசிடிவி கேமராவில் இருக்கும் காட்சிகளை பாருங்கள் அப்பொழுது தான் உங்களுக்கு எல்லாம் உண்மையும் புரியும்.., பார்த்து விட்டு இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள் என கேட்டுள்ளார்.
காவலர்களும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்துள்ளனர்.., அதில் செந்தில் குமாரின் மகள் கோவிலின் உள்ளே புகைப்படம் எடுத்தது, இவர்களுக்கு பின் வரும் பக்தர்களிடமும் கண்ணியமாக நடந்து கொண்டதும் பதிவாகியுள்ளது.
பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி பொய்யான புகார் அளித்த செந்தில் குமாரை காவல் துறையினர் கண்டித்துள்ளனர். மேலும் போக்சோ சட்டம் என்பது பெண்களை பாதுகாப்பதற்காக மட்டுமே தவிர பிற காரணங்களுக்காக அல்ல எனவும் காவல் துறையினர் செந்தில் குமாரை எச்சரித்துள்ளனர்.
Discussion about this post