பேருந்தில் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் 17 லட்சம் அபராதம் வசூல்..!!
மாநகர போக்குவரத்துகளில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் “வாகன சட்டம் 1988ன் கீழ் 178(1) பிரிவின் படி 500 ரூபாய் அபராதம்” வசூலிக்கப்படும். கடந்த 3 மாதங்களாக பயணம் செய்தவர்களில் இருந்து 10,000 ஆயிரம் பேர் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.
அந்த 10,000 பேரிடம் இருந்து இதுவரை 17 லட்சம் வசூலிக்கப்பட்ட தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் பயணம் செய்தவர்களில் 3,915 பேர் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.., அதில் 6,00,850 ரூபாயும்.
ஜூன் மாதம் 6,658 பேர் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.., அதில் 6,24,100 ரூபாயும்.
ஜூலை மாதம் பயணம் செய்தவர்களில் 3,218 பேரிடம் இருந்து 5,55,900 ரூபாயும் வசூல் செய்துள்ளனர்.
பேருந்தில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வது தவறு என்று தெரிந்தும் சென்னையில் இருந்து உள்ளூர் வரை பயணித்தவர்களும், வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்பட்ட அபராதம் “17 லட்சத்து 80 ஆயிரத்து 850 ரூபாய் என்பது குறிப்பிடதக்கது.
ஒரு சில பயனாளர்கள் டிக்கெட் விலையை விட அபாரதத்தின் விலை குறைவாக இருப்பதால் பயணசீட்டு இல்லாமல் பேருந்தில் பயணிப்பதாகவும் மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்கள் கூறுகின்றனர்.
ஒரு சில பயணிகள் நாங்கள் டிக்கெட் வாங்குவதற்குள் அடுத்த பேருந்து நிறுத்தம் வந்து விடுகிறது.., நடத்துனர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே டிக்கெட்களை கொடுக்கிறார்.., நாங்கள் சில்லறை கொடுத்து அனுப்பும் பொழுது எங்களுக்கு திருப்பி கிடைக்க தாமதமாகி விடுகிறது என சென்னை பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..