“வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான திட்ட ஆய்வு-அரக்கோணம்”
அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான திட்ட ஆய்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் வருகின்ற அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான திட்ட ஆய்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆகியோர் தலைமையிலான மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வினை மேற்கொண்டார்.
மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைப்பதற்கு போதிய இட வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து பார்வையிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வித இடர்பாடுகள் இன்றி பாதுகாப்பான முறையில் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையை மேற்கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.