சாலை அமைத்த சில நாட்களிலேயே மழை வெள்ளத்தால் சாலை சிதலமடைந்து காணப்படுகிறது…
கோபிசெட்டிபாளையம் அருகே சாலை அமைத்த சில நாட்களிலேயே மழை வெள்ளத்தால் சாலை சிதலமடைந்து காணப்படுவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலையாக அமைக்கும் பணி நடைபெற்றது.
சாலை அமைக்கும் பணிகள் நிறைவுற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் பெய்த கனமழையால் நெடுஞ்சாலைதுறையினர் அமைக்கப்பட்ட புதிய தார்சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை சுமார் 30 அடி தூரம் மழைநீர் அரித்து சென்றதில் சாலையின் அடியே புதர்போன்று மாறியது.
தார்சாலையில் சாலை அமைத்த சில நாட்களிலேயே சிதலமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் முன் நெடுஞ்சாலைதுறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.