காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் புதிதாக பொறுப்பேற்ற கரூர் பகுதியை ஆய்வு செய்தார்
கரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நகரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் நகரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது முக்கிய பிரதான சாலையில்,ரோந்து பணியில் மேற்கொண்ட பொழுது ஜவஹர் பஜார் பகுதியில் விதிமீறல் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இரண்டு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும், இதுபோன்று போக்குவரத்திற்கு இடையூறு விளைப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின் போது, நகர போக்குவரத்து ஆய்வாளர் புண்ணியமூர்த்தி மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.