தீராத நோய்களை தீர்க்கும் தீர்த்தம்..! இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்றால் போதும்..!
தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வேலாயுதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சன்னாசி திருக்கோவில் சிறப்பு பற்றி இதில் படிக்கலாம்..
இந்தத் திருக்கோவில் உள்ள மலைப்பகுதியில் சன்னாசி தெப்பம் மீனாட்சி தெப்பம், தாமரை தெப்பம் மற்றும் பல்வேறு புனித ஊற்றுகள் இருக்கிறது. தாமரை தெப்பமும் மீனாட்சி தெப்பமும் மழையின் உச்சியில் அமைந்துள்ளது சன்னாச்சி தெப்பம் கீழே உள்ளது.
சன்னாசி தெப்பத்திற்கு பக்தர்களுக்கு எளிதில் சென்று தரிசிக்கும் வகையில அமைந்துள்ளது. தேனி மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திருக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா மற்றும் பல்வேறு புனித விழாக்களுக்கு புனித நீர் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கோவில்களில் அபிஷேகம் செய்யப்படும்..
இந்தப் புனித நீர் உற்பத்தியாகி மலை அடிவாரத்தில் வரும் பொழுது அவை மூலிகை நீராகவும் மாறிவிடுகிறது. இந்த புனித நீரை குடித்தால் பல்வேறு நோய்களும் குணமாகி விடும் என்பது ஐதீக உண்மை..
எனவே இத்திருத்தலத்திற்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு இந்த ஊற்றில் குளித்து விட்டு சென்றால் குணமாகி விடும் என்பது ஐதீகம்…
இந்த ஆலமரத்தில் தொட்டில் கட்டி வைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. அதேபோல் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கட்டி வைத்தால் நோய்கள் குணமாகி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்..
– லோகேஸ்வரி.வெ