புதிய குற்றவியல் சட்டங்கள்..! ஏற்படக்கூடிய விளைவுகள்..! வழக்கறிஞர்கள் பேட்டி..!
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக “பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் சா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதினியம் 2023” ஆகிய 3 சட்டங்கள் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் 1860ம் ஆண்டு முதல் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் அமலில் இருந்த நிலையில். பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த ஆட்சியில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாக்ஷியா அதினியம் ஆகிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வர நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
அதனை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் எதிரிப்பு தெரிவித்தனர். இந்த புதிய சட்டங்கள் குறித்து வழக்கறிஞ்சர்கள் கூறுவது என்னவென்றால்.. புதிய சட்டங்களால் ஓரளவுக்கு மேல் பல சிக்கல்கள் உருவாக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இருப்பினும், குற்றவியல் சட்டங்களால் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்த குறியீடுகளை முன்னோக்கி நகர்ந்துள்ளதா கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் புதிய குற்றவியல் சட்டங்களால் நாட்டு மக்களுக்கான நீதி எளிதாக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி பதில் அளித்துள்ளார், “புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் இருந்து எழும் எந்த சவாலையும் சந்திக்க வழக்கறிஞர்கள் திறமையற்றவர்கள் என்று நான் சொல்லவில்லை.
1950ம் ஆண்டு அரசியலமைப்பே புதியதாக இருந்தது. புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் வந்தது. எனவே, புதிய குற்றவியல் சட்டங்களால் பிரச்சனை இல்லை. மேலும், குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் அதற்கான வழிகாட்டுதல்களை காட்ட உள்ளன.
நீதிமன்றங்களும் புதிய பிரச்சினைகளை கையாளத் தயாராக உள்ளது. தற்போது மொழி பெயர்ப்புகள் வேகமாக உள்ளது. அதனால் புதிய குற்றவியல் சட்டங்கள் விரைவில் அனைவரையும் சென்றடையும்.
மேலும் தென் மாநிலங்கள் ஆங்கிலம் பயன்பாட்டை ஆதரிக்கக் கூடியவை. தனிப்பட்ட முறையில் நான் புதிய சட்டங்களை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கூறுகையில், “புதிய சட்டங்களைப் படிப்பதிலும், பெயரிடலை சரி செய்வதிலும் உள்ள சவாலை வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சமமாக எதிர்கொள்வார்கள் இருப்பினும், சில விதிகளில் பயன்படுத்தப்படும் மொழியால் சிக்கல்கள் எழக்கூடும் என்பது எங்கள் கருத்து
சீர்படுத்தப்பட்ட சட்டங்கள், உடனடியாகக் கண்டறிய முடியாத அளவிற்கு விளைவுகளை ஏற்படுத்தும் குறிப்பாக அது ஒருவரின் எதிர்காலத்தையே பாதிக்கும்” என கூறினார்.
பழைய ஐபிசி, சிஆர்பிசி மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள மூன்று புதிய சட்டங்களுக்கு விரைவில் மாறுவது என்பது வழக்கறிஞர்களுக்கு சவாலானது.
தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் “அமித் ஆனந்த் திவாரி” கூறுகையில், இந்த புதிய தண்டனைச் சட்டத்தின் அடிப்படை வாசகம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதால், புதிய பிரிவுகள் மற்றும் சட்டப் பிரிவுகளைப் பற்றி அறிந்து கொள்வதுதான் வழக்கறிஞர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது..
புதிய வழக்கு பிரிவு எண்கள் மற்றும் அதற்கான காரணங்களை கண்டறிந்து, புதிதாக அறிமுகப்படுத்த பட்ட விதிகளின் தெளிவற்ற மற்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பான நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும் என வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்..
மேலும், தற்போதுள்ள நடைமுறைச் சட்டங்களில் சில கணிசமான மாற்றங்கள் உள்ளது. ஜூலை 1ம் தேதிக்கு முன் வரை பதிவு செய்யப்பட்ட குற்றங்களுக்கு, பழைய அடிப்படைச் சட்டம் ஐபிசி-யே தொடரும், ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களில் தண்டனை விதிக்கப்படும் என அவர் கூறினார்.
குறிப்பாக அதிகாரப்பூர்வமான சட்டங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதில் தாமதம் ஏற்படுவதால், புதிய குற்றவியல் சட்டங்களின் விதிகளைப் புரிந்து கொள்வதிலிருந்தும், குற்றவியல் நீதி அமைப்பில் திறம்பட பங்கேற்பதில் இருந்து நமது மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் ஒதுக்கிவிடுவார்கள்.
பிராந்திய மொழிகளிலே விசாரணை நடத்தப்படும்.. நீதிமன்றங்களில் வழக்குகளை தீர்ப்பதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என ஆனந்த் திவாரி தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..