ஒன்றிய அரசை தாக்கி பேசிய விஜய்..! தமிழக அரசுக்கு ஆதரவு..!
மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய், நீட் விலக்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்து தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் ஊக்க தொகை வழங்கும் விழா நடந்து கொண்டு இருக்கிறது.
ஒவ்வொரு மாணவருக்கும் அவர் கையாலேயே சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி 5000 ரூபாய் ஊக்கத்தொகையை ஆகியவற்றை வழங்கி பாராட்டி வருகிறார்.
அதில் முதற்கட்டமாக ஜூன் 28ம் தேதி அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரி யாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டாவது கட்ட விருது வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு “கல்வி விருது விழா” இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. முதல் இடம் பிடித்த 750 மாணவர்கள் உட்பட 3500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் என 19 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு வாழ்த்துகளையும், பரிசு பொருட்கள் மற்றும் உதவி தொகையையும் விஜய் வழங்குகிறார்.
கடந்த 28ம் தேதி நடந்த பாராட்டு விழாவில் அரசியல் கட்சியின் தலைவராக மாணவர்களை சந்தித்து பேசிய தளபதி விஜய். அப்போது அவர் பேசிய போது தமிழக அரசியல் தளத்தில் விவாதங்களை ஏற்படுத்தியது. அதில் அவரின் அரசியல் கலந்து அவர் பேசியது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போதே இரண்டாவது விழாவில் உரையாற்ற போவதில்லை என விஜய் கூறியிருந்தார். ஆனால், தற்போது திடீர் ட்விஸ்ட்டாக, மாணவர்கள் மத்தியில் உரையாற்ற போவதாக அறிவித்திருக்கிறார். இதுவரை தமிழக அரசுக்கு ஆதரவாக பேசாமல் இருந்த தலைவர் “விஜய்” இன்று தமிழக அரசுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசியுள்ளார்.
குறிப்பாகா நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் பேசியதாவது, “நீட் கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை பாதிக்கிறது. கல்வியை பொதுப்பட்டியலில் சேர்த்தில் இருந்து பிரச்சனை அதிகரித்துள்ளது. நீட் விலக்கு வேண்டுமெனில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
மாநில வழி கல்வியை பயின்றவர்களுக்கு NCRT சிலபஸில் தேர்வு வைத்தால் சரியா…? நீட் தேர்வு குறித்த நம்பகத்தன்மை மக்களிடம் போய்விட்டது, நீட் விலக்கு வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாது நீட் விலக்கு குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்திற்கு ஆதரவும் தெரிவித்துள்ளார். இன்று திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வு விலக்கு கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதரவு தருகிறோம். என கூறியுள்ளார். அவர் நீட்-க்கு எதிராக பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..