மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்..
ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் தமிழக முதலமைச்சரும், ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பிரபல பின்னனி பாடகி பி.சுசிலா மற்றும் இசைக்கலைஞர் பி.எம்.சுந்தரம் ஆகியோருக்கு கெளவர முனைவர் பட்டம் வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், கல்வி பொதுவான பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால் மட்டுமே அனைவருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர் கல்வி என மாற்ற முடியும் என தெரிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என தெரிவித்த முதலமைச்சர், அதற்கான சட்ட முன்வடிவுகளை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருந்தால் தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று பாராட்டுகள் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியத்தை 3 கோடியாக உயர்த்தியும், ஆராய்ச்சி மையத்தின் நூலகத்துக்கு 1 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.