“இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விரைவில் தமிழகத்திற்கு வரும்-அனிதா”
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் மீனவர்களுக்கான பல்வேறு நல திட்ட உதவிகளை மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 15 மீனவர்கள் இலங்கையில் இருந்து வீடு திரும்பி உள்ளதாகவும், படகுகள் விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்கப்படாத நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சரிடம் முறையிட்ட பெண்ணுக்கு விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.