மருத்துவர் பத்ரிநாத் மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்…
மருத்துவர் பத்ரிநாத் மறைவிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவன மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையை நிறுவியவர் பத்ரிநாத் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
அமெரிக்காவில் உயர்படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் ஏழை மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர், பத்மபூஷன், பத்மஸ்ரீ , டாக்டர் பிசி ராய் விருது, சிவிலியன் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்
இவறது மறைவையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கண் சிகிச்சையில் அவர் ஆற்றிய பங்களிப்பும், சமூகத்திற்கான அவரது இடைவிடாத சேவையும் அழியாத முத்திரையை பதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.