முடிவுக்கு வரமால் இழுத்தடிக்கும் காவிரி பிரச்சனை..!! டி.கே.சிவக்குமாரின் முடிவு..?
காவிரி பிரச்சனை பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ளே மேலே க்ளிக் செய்யவும்..
காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தையும், காவிரி மேலாண்மை வாரியத்தையும் முறையிட உள்ளதாக கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.(dk) சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தர வேண்டிய குறிப்பிட்ட அளவு தண்ணீரை தரமறுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு வருகிறது.
கடந்த 12ஆம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தது.
இந்த பரிந்துரையை அடுத்து கர்நாடகா அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது
கடந்த 13ஆம் தேதி பெங்களூரூவில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று மையத்தின் உத்தரவுபடி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. (dk) சிவக்குமார், கர்நாடகாவில் கடந்த 13 ஆண்டுகளின் இல்லாத அளவுக்கு வறட்சியை கண்டுள்ளதாக கூறினார்.
இதன் காரணமாக காவிரி ஒழுங்காற்று மைய உத்தரவுபடி தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட முடியாது என்றும், இது குறித்து சில நாட்களில் உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேலாண்மை வாரியத்திலும் முறையிட உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நேற்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து காவிரி விவகாரம் குறித்து முறையிட்டுள்ளார். அதில் , காவிரியில் உரிய அளவு தண்ணீர் இல்லை என்றும் இதனால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரி வறுபுறுத்த கூடாது என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post