கார்ப்பரேட் ஊழியர்களுக்கு இனி இந்த வசதி..! ஜெயபாரதி அறிவித்த அந்த அப்டேட்..?
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ந்து பல மணி நேரம் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுடைய மன அழுத்தத்தை போக்கவும் அமைதியான சூழலை உருவாக்கவும் அவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை கார்ப்பரேட் ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற தனியார் கிளப் நடத்த இருக்கிறது. என அதன் நிர்வாக இயக்குனர் ஜெயபாரதி செய்தியாளிடம் தெரிவித்தார்
கார்ப்பரேட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் கார்ப்பரேட் ஒலிம்பிக்ஸ் எனும் தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கான வெற்றிக்கோப்பைகள் அறிமுக நிகழ்ச்சி சென்னை டிடிகே சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.
கார்ப்பரேட் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாக இயக்குனர் ஜெயபாரதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஃபார்ம் குரு அமைப்பின் நிறுவனர் சேஷசாய், ஃபுட் பேங்க் ஆப் இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்னேகா மோகன்தாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கார்ப்பரேட் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான கோப்பைகளை அறிமுகம் செய்தனர்..
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்ப்பரேட் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாக இயக்குனர் ஜெயபாரதி. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ந்து பல மணி நேரம் வேலை பார்த்து வருகின்றனர் அவர்களுடைய மன அழுத்தத்தை போக்கவும் அமைதியான சூழலை உருவாக்கவும் அவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை கார்ப்பரேட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தி வருகின்றது தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டுக்கான கார்ப்பரேட் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் வருகின்ற ஜூலை மாதம் துவங்குகின்றது. கார்ப்பரேட் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேரு விளையாட்டரங்கம் , நேரு பூங்கா உள்ளிட்ட சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது இதில் கால் பந்து, தடகளம், நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனி தனி பிரிவுகளாக நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்களை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் ஊழியர்களுக்கு பதக்கங்களும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு வெற்றிக்கோப்பையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.