வெற்றியின் பாதையில் ஆதித்யா எல்-1.. இஸ்ரோ சொன்ன அடுத்த அப்டேட்..?
ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் நான்காவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 2 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கல விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆதித்யா எல்.1 (L1) விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து சுற்றுவட்ட பாதையின் உயரம் உயர்த்தப்பட்டது.
பின்னர் கடந்த 5-ஆம் தேதி 2-வது முறையாகவும், 10 தேதி மூன்றாவது முறையாகவும் சுற்றுவட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து, தற்போது, ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் நான்காவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியை குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தூரத்திலும் அதிகபட்சம் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தூரத்திலும் சுற்றி வருகிறது.
அதித்யா விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..