காவிரி நீரை திறந்து விட கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதிய தமிழக அரசு..!!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு மாதந்தோறும், குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும்.., என்ற பிரச்சனை வெகு நாட்களாகவே நடந்து கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு தமிழநாட்டிற்கு 34 டி.எம்.சி அளவு தண்ணீரை கர்நாடக அரசு, காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று கேட்ட பொழுது. கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து வைக்க வாய்ப்பு இல்லை என கூறியிருக்கிறார்.
அவர் கூறிய அந்த வார்த்தை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தமிழ்நாட்டிற்கு எங்களால் தண்ணீர் திறந்து வைக்க முடியாது என கர்நாடக முதல்வர் கூறியுள்ளார்.
இது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.., இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். டெல்டா பாசனத்திற்கு தேவையான நீரை பெற, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா மத்திய நீர்வளத்துறைக்கும், காவேரி மேலாண்மை ஆணையத்திற்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஜூலை மாதத்திற்குள் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்ப வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் அதற்கு உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி தண்ணீரையும், ஜூலை மாதத்திற்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரையும் வழங்க உத்தரவிட வேண்டும். ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் கொடுக்க வேண்டும், என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மேட்டூர் அணையில் மேட்டூரில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் நிலையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீரை வழங்க வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் இழுத்து அடிப்பது வேதனை குறியது. 90 அடிக்கும் குறைவாக நீர்மட்டம் குறைந்து விட்ட நிலையில் குறுவைப் பாசனத்திற்க்காக திறக்கப்படும், தண்ணீரின் அளவு 12,000 ஆயிரம் கன அடியில் இருந்து. 10,000 கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது.
இதனால் கட்டாயம் டெல்டாவில் குறுவை சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்தும், என தெரிவித்தார். மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் பத்து நாட்களுக்குள் தீர்ந்து விடும், இதனால் மக்களின் பயன் பாடுகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் போய் விடும். எனவே மக்களின் வாழ்வாதாரங்களை நினைவில் கொண்டு தண்ணீரை 10 நாட்களுக்குள் திறந்து விடுங்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதம் குறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக என இரு மாநில மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.